மும்பை - கோவா நெடுஞ்சாலையில் உள்ள கங்காவலி பகுதியை ஆய்வு செய்வதற்காக அரசு பொறியாளரான பிரகாஷ் ஷேடேகர் சென்றார். அங்கு சேதம் அடைந்திருந்த சாலையை காணச் சென்ற போது, அப்பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ நிதிஸ் நாராயணன் என்பவர் தனது ஆதவாளர்களுடன் இணைந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆனால், பிரகாஷ் தன் ஆய்வு செவ்வனே செய்துகொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள், பிரகாஷ் சுற்றிவளைத்து களிமண்ணை நீரில் கரைத்து அந்த சேற்று தண்ணீரை எடுத்து அவர் மீது ஊற்றி அவமானப்படுத்தினர்.