சென்னை - திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவை...! பக்தர்கள் மகிழ்ச்சி..!

Webdunia
ஞாயிறு, 2 ஜூலை 2023 (09:17 IST)
இந்தியாவின் பல பகுதிகளில் தற்போது வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் சென்னை - திருப்பதி இடையே புதிய வந்தே பாரத் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஏற்கனவே சென்னையில் இருந்து மைசூர் மற்றும் கோவை ஆகிய நகரங்களுக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருப்பதி வரை வந்தே பாரத் ரயில் சேவை இம்மாதம் தொடங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 
 
அதே போல் கோரக்பூர் - லக்னோ, ஜோத்பூர்-சபர்மதி நகரங்களுக்கும் இடையேயும் வந்தே பாரத் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு, அட்டவணை, கட்டணம் மற்றும் வழித்தடங்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்