லேடீஸ் கம்பார்ட்மெண்ட் பெட்டியில் நிர்வாணமாக ஏறிய நபர்: அதிர்ச்சியில் கூச்சலிட்ட பெண்கள்

Siva
புதன், 18 டிசம்பர் 2024 (13:22 IST)
மும்பையில் லேடீஸ் கம்பார்ட்மெண்ட் ரயில் பெட்டியில் திடீரென ஒருவர் நிர்வாணமாக ஏறியதை அடுத்து பெண்கள் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பையில் நேற்று சி. எஸ். எம். டி மற்றும் கல்யாண் விரைவு ஏசி லோக்கல் ரயிலில் பெண்கள் பெட்டிகள் திடீரென நிர்வாணமாக ஆண் ஒருவர் உள்ளே வந்து நின்றதால் பெண்கள் கூச்சலிட்டனர்.

இந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்த பயணி ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததை அடுத்து இந்த சம்பவம் வைரலாகி வருகிறது.

நேற்று மாலை நடந்த இந்த சம்பவத்தின் பின்னர், பெண்கள் கம்பார்ட்மெண்டில் அந்த நபர் பெண் பயணிகள் கூச்சலிட்டதை தொடர்ந்து பக்கத்து பெட்டியில் இருந்த டிக்கெட் பரிசோதகர் விரைந்து வந்து அந்த நபரை ரயிலில் இருந்து வெளியேற்றினார்.

இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது. அந்த நபர் தப்பி ஓடி விட்டதாகவும், அவரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.



Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்