இந்நிலையில் தான் அக்டோபர் மாதம் ஜெயம் ரவியின் 34 ஆவது பட அப்டேட் வெளியானது. அதன்படி இந்த படத்தை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்க, டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கவுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் வரும் 16 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் வடசென்னையை ஒட்டியக் கதைக்களமாக உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.