ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று தலைமை செயலகம் நோக்கி சைக்கிளில் பேரணி செய்து வருகிறார்.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து உட்பட 19 அம்சங்களையும் நிறைவேற்ற கோரி ஆளும் தெலுங்கு தேசம் கட்சி மத்திய அரசை வலியுறுத்தி வந்தது. ஆனால், இதை மத்திய அரசு கண்டுக்கொள்ளவில்லை.
இதனால், மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த தனது கட்சியின் சுஜனா சவுத்ரி, அஷோக் கஜபதி ராஜு ஆகிய இருவரையும் ராஜினாமா செய்ய வைத்தார். அதன் பின்னர் பாஜகவுடன் இருந்த கூட்டணியை முறித்துக்கொண்டார்.
அதோடு நிறுத்தாமல், மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான நோட்டீஸையும் வழங்கினார். மேலும், அவரது கட்சியின் எம்பிக்கள் பாராளுமன்றத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் இன்று சந்திரபாபு நாயுடுமத்திய அரசை சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி தலைமை செயலகம் நோக்கி சைக்கிளில் பேரணி செய்கிறார்.