தூதுவிட்ட மத்திய அரசு; தூசியாகவும் மதிக்காத சந்திரபாபு நாயுடு...

சனி, 24 மார்ச் 2018 (15:38 IST)
ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்காத காரணத்தால், அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கடும் அதிருப்தியில் உள்ளார். இந்நிலையில் மத்திய அரசு இவருக்கு தூது விட்டுள்ளது. 
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து உட்பட 19 அம்சங்களையும் நிறைவேற்ற கோரி ஆளும் தெலுங்கு தேசம் கட்சி மத்திய அரசை வலியுறுத்தி வந்தது. ஆனால், இதை மத்திய அரசு கண்டுக்கொள்ளவில்லை. 
 
இதனால், மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த தனது கட்சியின் சுஜனா சவுத்ரி, அஷோக் கஜபதி ராஜு ஆகிய இருவரையும் ராஜினாமா செய்ய வைத்தார். அதன் பின்னர் பாஜகவுடன் இருந்த கூட்டணியை முறித்துக்கொண்டார். 
 
அதோடு நிறுத்தாமல், மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான நோட்டீஸையும் வழங்கினார். எனவே, தற்போது மத்திய அரசு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தூது அனுப்பியுள்ளது. 

 
விசாகப்பட்டினத்தில் தனி ரயில்வே அமைப்பு, கடப்பாவில் இரும்பு தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சந்திரபாபு நாயுடு இதை ஏற்க மறுத்துவிட்டார். 
 
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த பின்னர், அவர்கள் எதுவாகினும் நாடாளுமன்றத்தில்தான் விவாதிக்க வேண்டும். இப்போது, இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தினால், நம் மீதான நம்பகத்தன்மையை மக்கள் இழந்துவிடுவார்கள் என சந்திரபாபு கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்