ஏப்ரல் 10-க்கு பிறகு ஊரடங்கு குறித்து முடிவெடுக்கப்படும்?

Webdunia
செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (17:33 IST)
ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து ஏப்ரல் 10 ஆம் தேதிக்கு பிறகு முடிவெடுக்கப்படும் என தெரிகிறது. 
 
கொரோனாவில் வீரியம் நாளாக நாளாக அதிகரித்த வண்ணமே உள்ளபடியால் இந்தியாவில், ஊரடங்கு தளர்த்துவது குறித்து பலரும் பலவித கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், நாடு தழுவிய ஊரடங்கை தளர்த்துவது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய அமைச்சர்களின் உயர்மட்டக் குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் படி 7 மாநில அரசுகள் கேட்டதாக தெரிகிறது. 
 
எனவே, ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மீதமுள்ள மாநிலங்கள் வரும் 10 ஆம் தேதிக்குள் தங்களது நிலைபாட்டை வெளிப்படுத்தினால் அதற்கு ஏற்றவாறு இது குறித்து ஏப்ரல் 14 ஆம் தேதிக்குள் அடுத்த முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்