ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 10,500 கோடி ரூபாய் அபதாரம்: மத்திய அரசு அதிரடி

Webdunia
சனி, 5 நவம்பர் 2016 (16:41 IST)
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு ரூ.10,500 கோடி அபராதம் விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


 

 
முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம், கிருஷ்ணா, கோதாவரி ஆற்றுப்படுகையில் இயற்கை எரிவாயு உற்பத்திப் பணிகளை மேற்கொண்டுள்ளது. 
 
மத்திய அரசுக்குச் சொந்தமான ஓஎன்ஜிசி நிறுவனமும் இந்த பணிகளில் பங்குதாரராக இணைந்து, ரிலையன்ஸ் உடன் செயல்பட்டு வருகிறது.
 
எனினும், ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு கிடைக்க வேண்டிய பங்கு லாபம் கிடைக்கவில்லை என்றும், ரிலையன்ஸ் நிர்வாகம் வர்த்தகச் செயல்பாடுகளை குறைத்து மதிப்பிட்டு, ஏமாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறது என்றும் புகார் எழுந்தது. 
 
இதன்பேரில், கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகையில் மேற்கொண்ட இயற்கை எரிவாயு உற்பத்திப் பணிகளில் தேவையற்ற இழப்பீடு ஏற்படுத்தியதற்காக, அந்நிறுவனத்திற்கு ரூ.10,500 கோடி வரை அபராதம் விதித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்