ஆக்சிஜன் இல்லை, வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுங்கள்: மருத்துவமனை அறிக்கை

வியாழன், 22 ஏப்ரல் 2021 (10:24 IST)
எங்கள் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் இல்லை, எனவே நோயாளிகளின் உறவினர்கள் உடனடியாக நோயாளிகளை வேறு ஆஸ்பத்திரிக்கு மாற்றிக் கொள்ளுங்கள் என மருத்துவமனை ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதன் காரணமாக ஏராளமான நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது 
 
இந்த நிலையில் லக்னோவில் உள்ள மருத்துவமனை ஒன்று தங்கள் மருத்துவமனையில் ஆக்சிஜன் கையிருப்பு இல்லை என்றும் மத்திய அரசிடம் ஏற்கனவே கேட்டும் எந்தவித பதிலும் இல்லை என்றும் அதனால் நோயாளிகள் ஆக்ஸிஜன் இருக்கும் வேறு மருத்துவமனைக்கு மாற்றி கொள்ளுங்கள் என்றும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருப்பது நோயாளிகளுக்கும் அவர்களது உறவினர்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது .

ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நிலவரம் கையை மீறி சென்று கொண்டிருப்பதாகவும் உடனடியாக மத்திய மாநில அரசுகள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்கள் கொந்தளிக்க தொடங்கி விடுவார்கள் என்றும் நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்