பொள்ளாச்சியில் சில ஆண்டுகளுக்கு முன், கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை ஏமாற்றி கடத்தி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை மேற்கொண்டு, அதற்கான வீடியோக்களை பதிவு செய்து அவர்கள் வாழ்க்கையை நரகமாக்கிய சம்பவம், தமிழகம் முழுவதும் அதிர்வலை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை சி.பி.ஐ. எடுத்துக்கொண்டு தீவிரமாக விசாரித்தது. அதன் பின்னணியில், சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்த்குமார், மணிவண்ணன், பாபு, ஹெரன்பால், அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள்மீது 2019ம் ஆண்டு மே 21 அன்று சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.