போர் என்பது மோசமானது.. கொண்டாட்ட வேண்டிய விஷயம் அல்ல: முன்னாள் ராணுவ தளபதி

Mahendran

செவ்வாய், 13 மே 2025 (10:42 IST)
இந்தியா–பாகிஸ்தான் இடையே மீண்டும் ஒருமுறை பதற்றமான நிலை உருவாகியிருக்கிறது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் சிலர், "இந்தியா பாகிஸ்தானை அடித்து நொறுக்கிவிட்டது" எனக் கொண்டாடி வருகின்றனர். ஆனால், இந்த மனப்பான்மையை முன்னாள் ராணுவ தளபதி எம்.எம். நரவனே கடுமையாக விமர்சித்துள்ளார்.
 
"போர் என்பது பாலிவுட் படம் அல்ல. அது கொண்டாடப்பட வேண்டிய விஷயமும் அல்ல," எனத் தெளிவாக தெரிவித்த அவர், "போர் எவ்வளவு மோசமானது, ஒரு நாட்டிற்கு எவ்வளவு இழப்புகளை ஏற்படுத்தும் என்பதை நான் நேரில் பார்த்தவன். அதனால் தான் இப்படிச் சொல்கிறேன்" என்றார்.
 
போரால் ஏற்படும் பேரழிவைப் பற்றி கூறிய அவர், "எண்ணற்ற உயிர்கள் சேதமடையும். குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை இழக்க நேரிடும். குடும்பங்கள் உணர்ச்சி ரீதியாக சின்னாபின்னமாக்கப்படும். அந்த அதிர்ச்சி சில நேரங்களில் பல தலைமுறைகள் வரை நீடிக்கும்" என்றும் எச்சரித்தார்.
 
"ஒரு ராணுவ வீரராக எனக்கு உத்தரவு வந்தால் நான் போர் நடவடிக்கை எடுப்பேன். ஆனால் அது என் முதல் விருப்பம் அல்ல. எந்த நேரமும், முதல் முயற்சி பேச்சுவார்த்தைதான் இருக்க வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்