இன்று +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான மறுதேர்வு எப்போது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் +2 பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் அதன் ரிசல்ட் இன்று வெளியானது. இதில் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கான மறுதேர்வுகளை உடனடியாக நடத்தி ரிசல்ட்டை வெளியிட பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு ஜூன் 25ம் தேதி முதல் மறுத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணை நாளை வெளியிடப்படும் என்றும், மாணவ, மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாகவே மறுதேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K