வெளியானது ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்! அரியலூர் முதலிடம் பிடித்து சாதனை!

Prasanth Karthick

வியாழன், 8 மே 2025 (09:52 IST)

இன்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அதிக தேர்ச்சியுடன் அரியலூர் மாவட்டம் முதல் இடம் பிடித்துள்ளது.

 

நடந்து முடிந்த 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் இதில் தேர்வு எழுதியதில் மொத்தமாக 95.03 சதவீதம் (7.53 லட்சம்) பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

 

பொதுத்தேர்வு எழுதியவர்களில் மாணவர்கள் 93.16 சதவீதமும், மாணவிகள் 96.70 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

 

பாடவாரியாக முழு மதிப்பெண் பெற்றவர்களில் அதிகபட்சமாக கணினி அறிவியல் பாடத்தில் 9,536 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். தாய்மொழியான தமிழ் பாடத்தில் 135 பேர் மட்டுமே முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

 

மாவட்ட வாரி தேர்ச்சி விகிதத்தில் 98.80 சதவீதம் தேர்ச்சியுடன் அரியலூர் முதலிடத்தில் உள்ளது, ஈரோடு மாவட்டம் 98 சதவீதமும், திருப்பூர் மாவட்டம் 97.50 சதவீதம்மும், கோவை 97.50 சதவீதமும், குமரி மாவட்டம் 97 சதவீதமும் தேர்ச்சி பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்