முன்னாள் முதலமைச்சர் மனைவியிடம் சிபிஐ விசாரணையா?

Webdunia
திங்கள், 6 மார்ச் 2023 (15:35 IST)
பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மனைவியிடம் சிபிஐ விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
முன்னாள் பீகார் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே துறை அமைச்சர் ஆக இருந்தபோது பல்வேறு முறைகேடு செய்ததாக அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் 16 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் ரயில்வே துறையில் வேலைக்காக அணுகியவர்களிடமிருந்து குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு நிலத்திற்கு பதிலாக ரயில்வே பணிகள் வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் இது குறித்து லாலு பிரசாத் யாதவ் மனைவி ரப்ரிதேவி மற்றும் அவரது மகள்களிடம் சிபிஐ விசாரணை செய்து வருவதாகவும் அவர்களது வீடுகளில் சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பீகாரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்