நிதிஷ்குமாரின் தவறான அணுகுமுறையே இன்னலுக்கு காரணம்: வட மாநில தொழிலாளர் குறித்து பீகார் அரசியல்வாதி..!

திங்கள், 6 மார்ச் 2023 (14:09 IST)
பீகார் முதல்வர் நிதீஷ் குமாரின் தவறான அணுகுமுறையே வடமாநில தொழிலாளர்களின் இன்னலுக்கு காரணம் என பீகார் மாநிலத்தின் முக்கிய அரசியல்வாதி ஒருவர் குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் குறிப்பாக பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோக்கள் வதந்தியாக பரவி வரும் நிலையில் இது குறித்து தமிழக மற்றும் பீகார் மாநில அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. 
மேலும் பிகார் அரசு அனுப்பிய நான்கு நபர்கள் குழு வட மாநில தொழிலாளர்கள் மத்தியில் இது குறித்து விசாரணை செய்து வந்ததில் வடமாநில தொழிலாளர்கள் எந்தவித தாக்குதலுக்கும் உள்ளாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவிய தகவலை அடுத்து பீகார் மாநிலத்தின் லோக் ஜனசக்தி தலைவர் சீராக் பஸ்வான் சென்னை வந்துள்ளார். அவர் வட மாநில தொழிலாளர்களிடம் சந்தித்து பேசிய பிறகு வட மாநில தொழிலாளர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் இந்தியாவில் எந்த இடத்திலும் பணியாற்ற இந்தியாவில் உள்ள அனைவருக்கும் உரிமை உள்ளது என்றும் தமிழ்நாடு பிஹார் இடையே நல்லுறவு இருப்பதாகவும் அதை கெடுக்க  சிலர் முயற்சிக்கின்றனர் என்றும் தெரிவித்தார். 
 
மேலும் பீகார் முதல்வர் நிதீஷ் குமாரின் தவறான அணுகுமுறையே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பல இன்னலுக்கு உள்ளாகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்