தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படவில்லை: அமைச்சர் சி.வெ.கணேசன்

வெள்ளி, 3 மார்ச் 2023 (20:01 IST)
தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படவில்லை என அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்துள்ளார். 
 
பீகார் மாநில சட்டசபையில் தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் குறிப்பாக பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பாஜக எம்எல்ஏக்கள் ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி, தமிழக டிஜிபி  சைலேந்திரபாபு அவர்களின் அறிக்கையை சுட்டிக்காட்டி தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் யாரும் தாக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் சமூக வலைதளங்களில் பரவி வரும் பழைய வீடியோக்களை நம்பி பிரச்சனையை ஏற்படுத்த வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.
 
இந்த நிலையில் அமைச்சர் சி.வெ.கணேசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்களுக்கு எந்த விதமான அச்சுறுத்தலும் இல்லை என்றும் அவர்கள் தாக்கப்படுவதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் இது குறித்து தவறான செய்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்