பொதுச்சொத்துகள் சேதப்படுத்திய வழக்கு: முதல்வருக்கு கோவா போலீஸார் சம்மன்

Webdunia
வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (14:05 IST)
பொதுச்சொத்துகளை சேதப்படுத்திய தொடர்பான வழக்கில் வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக வேண்டுமென்று கோவா போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

கடந்தாண்டு கோவா மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெற்றதது. இத்தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 2 இடங்களில் வென்றது.

இத்தேர்தலின்போது, ஆம் ஆத்மி கட்சியினர் பொதுச்சொத்துகளைச் சேதப்படுத்தியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரரிவால்  நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்று அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

இது கட்சி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்