சென்னை ரயில்களின் வேகம் 130கிமீ என அதிகரிப்பு. .தெற்கு ரயில்வே தகவல்..!
வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (17:45 IST)
சென்னை வழியாக செல்லும் சில ரயில்களின் வேகம் 130 கிலோமீட்டர் என அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை ரேணிகுண்டா, அரக்கோணம் ஜோலார்பேட்டை, சென்னை கூடூர் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்கள் தற்போது மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் இனி 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் உள்ளது
சென்னை பெங்களூர் சதாப்தி ரயில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் என்றும் அதேபோல் நாளை பிரதமர் தொடங்கி வைக்கும் சென்னை கோவை வந்தே பாரத் ரயில் 130 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை வழியாக செல்லும் ரயில்களின் வேகம் அதிகரித்து உள்ளதை அடுத்து 20 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை பயணிகளுக்கு மிச்சமாகும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.