திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்ட மணமகன் கைது

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2016 (20:48 IST)
திருமண மண்டபத்துக்கு குதிரையின் மீது சவாரி செய்த நிலையில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டப்படி வந்த மணமகன் கைது செய்யப்பட்டார்.


கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ந்தேதி ஐதராபாத்தில் திருமணம் நடந்தது. அந்த திருமணத்தின் போது மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. அதில் மணமகன் குதிரை மீது அமர வைத்து திருமண மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

அப்போது மணமகன் இரு கைகளிலும் துப்பாக்கியை வைத்துக்கொண்டு வானத்தை நோக்கி சுட்டார். பின்னர் மண்டபத்துக்கு சென்றார்.

இச்செய்தியை அறிந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று மண்டபத்தில் விசாரணை நடத்தினர். ஆனால் திருமண மண்டபத்தில் மணமகன் வீட்டார், டம்மி துப்பாக்கியால் சுட்டதாக தெரிவித்தனர். அதனால் காவல்துறையினர் அங்கிருந்து புரப்பட்டு சென்றனர்.

இந்நிலையில் மணமகன் துப்பாக்கியால் சுடும் வீடியோ காட்சி வெளியானது. அதில் துப்பாக்கியில் இருந்து துப்பாக்கி குண்டுகள் வெடித்து வானத்தை நோக்கி சீறிப்பாய்வது தெரியவந்தது. இதுபற்றி உள்ளூர் தொலைக் காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் செய்தி வெளியானது.

அதைத்தொடர்ந்து புதுமாப்பிள்ளையை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
அடுத்த கட்டுரையில்