நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல்! குற்றவாளிகளுக்கு மேலும் 15 நாட்கள் காவல்!

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2023 (15:27 IST)
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரை 15 நாட்கள் காவலில் விசாரிக்க டெல்லி காவல்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


 
2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி நடந்த நாடாளுமன்ற பயங்கரவாதத் தாக்குதலின் ஆண்டு நினைவு நாளான கடந்த 13ம் தேதி மக்களவையில் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து இருந்த ஷர்மாவும்,  மனோரஞ்சனும் திடீரென குதித்து  குப்பிகளில் இருந்து மஞ்சள் வாயுவை வெளியேற்றினர். 

அதே நேரத்தில்  மராட்டிய மாநிலத்தை சோ்ந்த அமோல் ஷிண்டே மற்றும் அரியானாவைச் சோ்ந்த நீலம் தேவி ஆகிய இருவர் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே "சர்வாதிகாரம் கூடாது" என்று முழக்கமிட்டவாறே இதேபோன்று வண்ணப்புகைக் புகைக் குப்பிகளை வீசினர்.  இதை அடுத்து நான்கு பேரை கைது செய்த போலீசார், அவர்களை  7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்நிலையில் அவர்களது காவல் முடிவடைந்ததை அடுத்து, டெல்லி நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி ஹர்தீப் கவுர் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றவாளிகள் 4 பேரை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி காவல்துறைக்கு நீதிபதி அனுமதி வழங்கினார்.

இதனிடையே நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு சோதனை பணிகளில் இருந்து டெல்லி காவல்துறை நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்