ராகுல் காந்தி துணிச்சலான, நேர்மையான அரசியல்வாதி: பிரபல நடிகர் பாராட்டு..!

Mahendran
வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (15:32 IST)
பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலிகான் சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ராகுல் காந்தி ஒரு நேர்மையான மற்றும் துணிச்சலான அரசியல்வாதி என்றும் அவர் இந்தியாவை வளமான எதிர்காலம் நோக்கி வழிநடத்தக்கூடியவர் என்றும் பாராட்டியுள்ளார். 
 
பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் அனைவரும் தைரியமான தலைவர்களாக இருந்தாலும், ராகுல் காந்தியை அவர் குறிப்பாக மேன்மேலும் பாராட்டினார்.
 
மேலும் அவர் பேட்டியின் போது, “ராகுல் காந்தியின் செயல்பாடுகள் மக்களைச் சார்ந்து இருப்பதுடன், அவர் மிகவும் கடினமான உழைப்பாளி” என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
இன்னொரு கேள்விக்கு "நான் யாரை ஆதரிக்கிறேன் என்பதையும், என் அரசியல் நிலைப்பாடு என்ன என்பதையும் நான் கூற விரும்பவில்லை, ஏனென்றால் நான் அரசியல் சார்பற்றவனாகவே இருக்க விரும்புகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்