ராகுல் காந்தியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்: சபாநாயகருக்கு கடிதம் எழுதிய பா.ஜ.க. எம்.பி..!

Siva

புதன், 25 செப்டம்பர் 2024 (16:01 IST)
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என பாஜக எம்.பி. சபாநாயகருக்கு அதிகம் எழுதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ராகுல் காந்தி அமெரிக்கா சென்றபோது, இந்தியாவில் உள்ள வேலையில்லா திண்டாட்டம், இட ஒதுக்கீடு, சீக்கியர் நிலைமை உள்ளிட்டவை குறித்து பேசினார்.

வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை பற்றி அவதூறாக பேசுவதா என பாஜக குற்றம் சாட்டிய நிலையில், அவரது பாஸ்போர்ட் ரத்து செய்ய வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களுக்கு பாஜக எம்.பி. ஜோஷி கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியை ராகுல் காந்தி தவறாக பயன்படுத்தி வருகிறார் என்றும், ஒரு பொறுப்புள்ள இந்திய குடிமகன் என்ற முறையில் வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை அவதூறாக பேசியது எந்த வகையில் சரி? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது போன்ற கருத்துக்களை ராகுல் காந்தி பேசுவதால் சர்வதேச உறவுகள் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும், மேலும் இது தேச விரோத செயலாகும் என்றும் தெரிவித்துள்ளார். நாட்டின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும் ராகுல் காந்தி, கருத்து சுதந்திரம் என்ற பெயரில் என்ன பேசினாலும் அதை நியாயப்படுத்த முடியாது. எனவே, அவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்றும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்