5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு: மத்திய அரசு திட்டம்

Webdunia
திங்கள், 5 மார்ச் 2018 (16:51 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்பே மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தும் திட்டத்தை அமல்படுத்தவுள்ளதாக அறிவித்தார். இந்த நிலையில் தற்போது இந்த திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது.

மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு சிக்கிம், புதுச்சேரி, டெல்லி, ஹிமாச்சல் பிரதேசம், குஜராத், பஞ்சாப் உட்பட 22 மாநிலங்கள் ஆதரவு கொடுத்துவிட்டதாகவும் மற்ற மாநிலங்களில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் மத்திய அரசின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை பொருத்தமட்டில் பாஜக அரசின் பல திட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு கொடுத்துள்ளதால் இந்த திட்டத்திற்கு ஆதரவு கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கேரளா, மேற்குவங்கம், ஆந்திரா போன்ற மாநிலங்கள் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்காது என்றே கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்