போதையில் மாமியாரையும் விட்டு வைக்காத மருமகன்...

Webdunia
திங்கள், 5 மார்ச் 2018 (16:45 IST)
கேரளாவில் 90 வயது மதிக்கதக்க மாமியாரை 50 வயது மருமகனே போதையில் பலாத்காரம் செய்ய துணிந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள மெப்பயூர் பகுதியில், திருமணம் ஆன தனது மகளின் வீட்டுக்கு அருகில் வீடு எடுத்து குடியிருந்துள்ளார் 90 வயது மூதாட்டி. 
 
சம்பவ நாளன்று முதாட்டியில் மகள் வெளியே சென்ற நிலையில், மூதாட்டி தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது போதை தலைக்கேரிய நிலையில் வீடு வந்த மருமகன், மாமியாரை கட்டாயபடுத்தி பாலியல் துன்புறுத்தளுக்கு உள்ளாக்கியுள்ளார். 
 
அப்போது மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு அந்த நபரை போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
மேலும், இந்த சம்பவம் கேராவில் பெண்களுக்கான பாதுகாப்பை மேலும் கேள்விக்குறி ஆக்கியுள்ளது. தற்போது அந்த மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்