பிரதமர் மோடி நேற்று இரவு 500, 1000 ரூபாய் நோட்டுகள் நள்ளிரவு முதல் செல்லாது என அறிவித்தார். இதனால் நாட்டு மக்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். கருப்பு பணத்தை மீட்கவே இந்த அதிரடி நடவடிக்கை என கூறினார் பிரதமர் மோடி.
இதனால் அதிர்ச்சிக்குள்ளாகிய கருப்பு பணம் வைத்திருப்போர் நேற்று இரவே அதனை நகைக்கடைகளில் கொடுத்து தங்கமாக மாற்றியதாக தகவல்கள் வருகின்றன. அரசு ஊழியர்கள் பலர் நேற்று இரவு நகை வாங்கியதாக கூறப்படுகிறது.
பெரும்பாலும் கருப்பு பணம் வைத்திருப்போர் அதனை 500, 1000 ரூபாய் நோட்டுகளாக வைத்திருப்பர். நேற்று பிரதமர் 500, 1000 நோட்டுகள் நள்ளிரவு முதல் செல்லாது என அறிவித்ததும் கருப்பு பணம் வைத்திருந்த பலர் தங்கள் 500, 1000 ரூபாய் பணங்களை கொடுத்து அதனை தங்கமாக மார்றினார்கள்.
இந்தியாவில் உள்ள பல்வேறு நகைக்கடைகளில் நேற்று கூட்டம் அலைமோதியது. தமிழகத்தில் நள்ளிரவு 12 மணி வரை தங்கம் விற்பனை நடைபெற்றதாகவும், ஒரு மாதம் விற்பனையாக வேண்டிய தங்கம் நேற்று இரவு 3 மணி நேரத்தில் விற்றதாக நகை கடை ஊழியர்கள் கூறுகிறார்கள்.