முதல்வர் விழாவில் கருப்புச் சட்டை அணிந்த குழந்தை – அனுமதி மறுப்பால் சர்ச்சை !

Webdunia
புதன், 30 ஜனவரி 2019 (10:19 IST)
அஸ்ஸாமில் முதல்வர் கலந்து கொண்ட விழா ஒன்றில் குழந்தை ஒன்றிற்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தை தற்போது பாஜக ஆண்டு வருகிறது. அங்கு அரசு கொண்டு குடிமக்கள் சீர்திருத்த சட்டத்திற்குப் பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு உருவாகியுள்ளது. அதனால் பாஜக வை சேர்ந்தவர்கள் எந்த நிகழ்வில் கலந்து கொண்டாலும் மக்கள் கருப்புக் கொடி காட்டி தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். இதனால் அங்கு கருப்புக்கு அறிவிக்கப்படாத தடை உருவாகியுள்ளது.

இந்நிலையில் அடிக்கல்நாட்டு விழா ஒன்றில் அஸாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் கலந்து கொண்டார். இதில் பாதுகாப்பு அதிகாரிகள் கருப்புச் சட்டை அணிந்து வந்த  3 வயது குழந்தையை உள்ளே வர அனுமதி மறுத்தது சர்ச்சையானது. இதுகுறித்து அந்த குழந்தையின் தாய் ‘என் மகன் கருப்புச் சட்டை அணிந்திருந்ததால் பாதுகாப்பு அதிகாரிகள் என் மகணை விட உள்ளே அனுமதிக்க வில்லை’ எனக் குற்றம் சாட்டினார். இதனால் இந்த விவகாரம் சர்ச்சைகளைக் கிளப்பியது.

இந்த விஷயம் முதல்வர் காதுக்கு செல்லவே  அவர், அசாம் டிஜிபி குலதர் சிகியாவை இதுசம்மந்தமாக அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில் பொதுமக்களின் கருப்புக்கொடி எதிர்ப்புக்கு எதிர்வினையாக பாஜக வினரும் இந்து அமப்புகளும் வெள்ளைக்கொடிக் காட்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்