ஆட்சியை விட்டு கொடுக்கிறதா பாஜக? சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் டார்ச்சரால் அதிரடி முடிவு?

Mahendran

புதன், 5 ஜூன் 2024 (13:14 IST)
கடந்த பத்து ஆண்டுகளாக தனி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்த பாஜக தற்போது கூட்டணி கட்சிகள் உதவியால்தான் ஆட்சி அமைக்க வேண்டிய நிலை இருப்பதால் கூட்டணி கட்சிகளின் பேரம் குறித்து பாஜக மூத்த தலைவர்கள் கவலை அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் ஆகிய இருவரும் தங்களால் தான் ஆட்சி அமையும் என்பதால் உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் உட்பட பல முக்கிய அமைச்சர் பதவியை கேட்பதாகவும் நிதீஷ் குமார் சபாநாயகர் மற்றும் துணை பிரதமர் பதவி கேட்பதாகவும் கூறப்படுகிறது.

241 தொகுதிகளில் வெற்றி பெற்று முக்கிய துறைகளை எல்லாம் 20 தொகுதிகளுக்குள் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு வாரி வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அதற்கு பதிலாக ஆட்சியை இந்தியா கூட்டணியிடம் ஒப்படைத்து விட்டு கொஞ்ச நாள் வேடிக்கை பார்க்கலாம் என்று பாஜக முக்கிய தலைவர்கள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஒரு சில கட்சிகள் கொண்ட கூட்டணிக்கே இவ்வளவு பிரச்சனை வரும்போது 26 கட்சிகள் கொண்ட கூட்டணியாக இந்தியா கூட்டணி வரும் நிலையில் கண்டிப்பாக அதில் பிரச்சனை ஏற்பட்டு ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் அந்த ஆட்சி கவிழ்ந்து விடும் என்றும் அதன் பிறகு நாம் மீண்டும் தேர்தலை சந்தித்து அல்லது கூட்டணி கட்சிகளை சமாளித்து ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொள்ளலாம் என பாஜகவின் மூத்த தலைவர்கள் மோடி மற்றும் அமித்ஷாவிடம் ஆலோசனை கூறியுள்ளதாக தெரிகிறது

இந்த ஆலோசனையை மோடி, அமித்ஷா ஏற்றுக்கொள்வார்களா? இந்தியா கூட்டணிக்கு ஆட்சியை விட்டுக் கொடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்