இந்த நிலையில் டெல்லியில் இன்று பாஜக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் அதில் கலந்து கொள்வதற்காக சந்திரபாபு நாயுடு டெல்லி செல்ல உள்ளார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது தேசிய ஜனநாயக கூட்டணியுடன் பயணிப்பதில் உறுதியாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். இதில் இருந்து அவர் இந்தியா கூட்டணிக்கு செல்ல மாட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.