உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பதவியில் இருந்து நீக்க கட்சி தலைமை ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.
உத்தர பிரதேச முதல்வராக இருந்து வருபவர் யோகி ஆதித்யநாத். இவருக்கும் நாட்டின் பிரதமர் மோடிக்கும் கடந்த சில மாதங்களாக சுமூகமின்மை இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. இது கட்சிக்குள் பனிப்போரை துவங்கியுள்ளதாக செய்திகள் அவ்வப்போது வெளியாகிவந்தன. அதுமட்டுமில்லாமல் மோடிக்கு பின் யோகி ஆதித்யநாத்தை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பாஜக முடிவெடுத்துள்ளதாகவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் இப்போது யோகி ஆதித்யநாத்தை உ பி முதல்வர் பதவியில் இருந்து நீக்க கட்சி தலைமை ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. இது பாஜகவினர் இடையே குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.