இன்றுக்குள் 80,000 வந்துவிடுமா சென்செக்ஸ்.. மீண்டும் உச்சம் செல்லும் பங்குச்சந்தை..!

Siva

புதன், 3 ஜூலை 2024 (11:35 IST)
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை உயர்ந்து வருகிறது என்பதும் இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய முதலே ஏற்றத்தில் இருப்பதால் முதலீட்டாளர்கள் குஷி ஆகி உள்ளனர். 
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 460 புள்ளிகள் உயர்ந்து 79 ஆயிரத்து 897 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. இன்னும் சுமார் 100 புள்ளிகள் உயர்ந்து விட்டால் பங்குச்சந்தை வரலாற்றில் முதன் முதலாக 80 ஆயிரம் தோட்ட சாதனை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அதேபோல் தேசிய பங்கு சந்தையான நிப்டி 145 புள்ளிகள் உயர்ந்து 24 ஆயிரத்து 271 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. இன்றைய பங்குச்சந்தையில் ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல் ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் ஹெசிஎல் டெக்னாலஜி, ஹிந்துஸ்தான் லீவர், இன்போசிஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்