பப்ஜி விளையாடாதீர்கள்… மதனின் யு டியூப் பக்கத்தில் அறிவுரை!

Webdunia
திங்கள், 21 ஜூன் 2021 (08:08 IST)
சமீபத்தொல் பாலியல் அவதூறு வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ள மதனின் யுடியூப் சேனல் முடக்கப்பட்டுள்ளது.

யூடியூபர் மதன் ஓபி சிறுவர் சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியதாகவும் இளம் பெண்களை பாலியல் வன்முறைக்கு தூண்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து மதன் தலைமறைவாக இன்று காலை அவரை தர்மபுரியில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை சென்னை காவல் ஆணையர் அலுவலகம் கொண்டுவரப்பட்டார்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்குப்பின் நாளை மாலை மதன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். இதனிடையே, பப்ஜி மதனிடம் ஏமாந்து பணத்தை இழந்தவர்கள் dcpccbi@gmail.com-ல் புகாரளிக்கலாம் என்று காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஏமாந்தது ரூ.5 ஆயிரம் ரூபாயாக இருந்தால் கூட புகார் அளிக்கலாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவித்துள்ளனர்.

அதையடுத்து அவரின் யுடியூப் சேனல் முடக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் இருந்த வீடியோக்கள் எல்லாம் நீக்கப்ப்ட்டுள்ளது. சேனலின் டெஸ்க்ரிப்ஷனின் சிறுவர்களுக்கு அறிவுரை வழங்கும் விதமாக ‘பப்ஜி விளையாடாதீர்கள். படிப்பில் கவனம் செலுத்துங்கள்’ என மாற்றப்பட்டுள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்