இந்த பழத்தை சாப்பிட்டதால் நிபா வைரஸ் பரவியதாம் – அதிகாரிகள் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 13 ஜூன் 2019 (13:39 IST)
போன வருடம் பல உயிர்களை பலி வாங்கிய நிபா வைரஸ் இந்த முறையும் கேரளாவை தாக்கியிருக்கிறது. நிபா வைரஸ் பரவ காரணம் ஒரு பழத்தை சாப்பிட்டதுதான் என ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

முதன்முதலில் இந்த வைரஸ் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த பறவூரில் வசித்த 23 வயது இளைஞருக்குதான் பரவியது. அவர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் வைரஸ் பரவியதற்கான காரணத்தை அறிய தேசிய வைராலஜி நிறுவனம் பறவூர் பகுதிக்கு சென்றனர். வௌவால்கள் மூலம் பரவும் வியாதி என்பதால் அங்கு உள்ள வௌவால்கள் சிலவற்றை மாதிரி ஆராய்ச்சிக்காக பிடித்தனர். அப்போது அந்த இளைஞரின் வீட்டின் அருகேயும் ஒரு வௌவால் கூடு இருப்பதை பார்த்த ஆராய்ச்சியாளர்கள் அதையும் சோதித்து பார்த்தனர்.

அப்போதுதான் அவர்களுக்கு உண்மை புரிந்தது. பெரும்பானமையான வௌவால்கள் அந்த ஊரில் உள்ள கொய்யா மரங்களில்தான் கூடு கட்டியிருந்தன. நிபா பாதிக்கப்பட்டவரின் வீட்டின் அருகில் இருந்த மரமும் கொய்யா மரம்தான். அதிலுள்ள பழங்களில் வௌவாலின் எச்சங்கள் பட்டிருக்கிறது. அந்த பழத்தை அவர் சாப்பிட்டதால்தான் நிபா தொற்று அவருக்கு ஏற்பட்டிருக்கிறது என கண்டறிந்துள்ளார்கள்.

எனினும், ”தற்போது நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் தற்போது நலமாக உள்ளார்” என காக்கநாடு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்