மனைவி மற்றும் கள்ளக்காதலியுடன் ரூம் போட்ட ஆசிரியர் ! பகீர் சம்பவம்

Webdunia
வியாழன், 13 ஜூன் 2019 (13:29 IST)
கன்னியாகுமரி மாவட்டத்தைச்  சேர்ந்தவர் பிராங்கிளின் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.  இவரது மனைவி புனிதா. இந்த தம்பதிக்கு  6 வயதில் பெண் குழந்தை உள்ளது. பிராங்கிளின் விடுமுறைக்கு கன்னியாகுமாரிக்கு வரும் போது தன் வீட்டருகே வசித்துவந்த சரண்யா என்ற பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. 
இதனை புனிதாவும் ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. பின்னர் மூவருமாக சேர்ந்து உடலுறவு கொண்டதாகத் தெரிகிறது. இது ஊரில் உள்ளவர்களுக்கு தெரிந்து விஷயம் காட்டுத் தீயாய் பரவியது.
 
இதனால் மனமுடைந்த மூவரும் , மகளையும் கூட்டிக்கொண்டு ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்துத்தங்கியுள்ளனர்.சம்பவ தினத்தன்று மூவரும் காலையில் அறையைத் திறக்காததால் விடுதிம் ஊழியர்கள் சந்தேகத்துடன் அறையைத் திறந்து பார்த்தனர்.
 
உள்ளே நால்வரும் விஷம் குடித்த நிலையில் மயங்கிக்கிடந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் நால்வரையும் மீட்டு மருத்துவனையில் சேர்ந்தனர். தற்போது இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
 
இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்