ஒரு கோடிக்கும் அதிகமான அரசு வேலைகள்.. பிஹார் தேர்தலுக்காக NDA கூட்டணியின் முக்கிய வாக்குறுதிகள்!

Mahendran

வெள்ளி, 31 அக்டோபர் 2025 (11:29 IST)
பிஹார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, முதல்வர் நிதிஷ் குமார், பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
 
NDA கூட்டணியின் முக்கிய வாக்குறுதிகள் பின்வருமாறு:
 
இளைஞர்களுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான அரசு வேலைகள் உருவாக்கப்படும்.
 
பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். பெண் தொழில்முனைவோருக்கு ரூ. 2 லட்சம் வரை நிதியுதவி அளிக்கப்படும்.
 
அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 50 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்படும்; 10 புதிய தொழிற்துறைப் பூங்காக்கள் அமைக்கப்படும்.
 
KG முதல் முதுகலை வரை தரமான கல்வி இலவசமாக வழங்கப்படும்; ஒவ்வொரு மாவட்டத்திலும் திறன் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்.
 
பிஹாரின் 4 நகரங்களுக்கு மெட்ரோ ரயில் சேவைகள் விரிவுபடுத்தப்படும், மேலும் 7 புதிய விரைவுச் சாலைகள் அமைக்கப்படும்.
 
இந்த வாக்குறுதிகள் மூலம் பிஹார் மாநிலத்தில் வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு, மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி ஆகியவற்றை NDA இலக்காக கொண்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்