பீகார் என்.டி.ஏ. கூட்டணி ஜெயித்தால் நிதிஷ்குமார் முதல்வர் இல்லையா? குட்டையை குழப்பும் அமித்ஷா?

Siva

வெள்ளி, 17 அக்டோபர் 2025 (09:49 IST)
பீகார் என்.டி.ஏ. கூட்டணியில் பிளவு ஏற்பட்டதாக வெளியான யூகங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மறுத்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "வரவிருக்கும் தேர்தலை நிதிஷ் குமார் தலைமையில்தான் என்.டி.ஏ. கூட்டணி சந்திக்கும். எனினும், தேர்தலுக்கு பிறகுதான் முதல்வர் வேட்பாளர் குறித்து அனைத்து கூட்டணி கட்சிகளும் ஒன்றிணைந்து முடிவு செய்யும்" என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
 
2020 தேர்தலில் பாஜக அதிக இடங்களை பெற்றபோதிலும், கூட்டணியின் மூத்த தலைவரான நிதிஷ் குமாருக்கு மரியாதை அளிக்கும் விதமாகவே மீண்டும் முதல்வர் பதவி வழங்கப்பட்டதாக அமித் ஷா விளக்கமளித்தார்.
 
மேலும், நிதிஷ் குமார் கட்சி மாறுவதாக உள்ள விமர்சனங்களுக்கு பதிலளித்த அமித்ஷா, அவரது நீண்ட அரசியல் பயணம் பெரும்பாலும் காங்கிரஸுக்கு எதிராகவே இருந்ததாக குறிப்பிட்டார். உடல்நிலை குறித்த எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்தார்.
 
மேலும்"லாலு பிரசாத் யாதவின் ஆட்சியை மக்கள் மீண்டும் விரும்பவில்லை" என்று கூறிய அவர், சிறிய கட்சிகளை ஏளனமாக பார்க்கும் காங்கிரஸின் ஆணவத்தால்தான் பல மாநிலங்களில் அது தனது பலத்தை இழந்து வருவதாகவும் விமர்சித்தார். 
 
என்.டி.ஏ. கூட்டணி தேர்தலில் முந்தைய சாதனைகளை முறியடிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்