இந்த போட்டிக்கான அணியில் இடம்பெறும் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளதாக துணைப் பயிற்சியாளர் ரியான் டென் டோஷெட் தெரிவித்துள்ளார். லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் அவருக்கு விரலில் காயமேற்பட்டதால் பாதியிலேயே களத்தில் இருந்து வெளியேறினார். அதே போல ஆகாஷ் தீப் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் காயமடைந்துள்ளனர்.