சண்டிகர் மாநகராட்சி பொதுமக்கள் பாதுகாப்பு கருதி 'செல்லப்பிராணி மற்றும் சமூக நாய்கள் துணைச் சட்டங்கள், 2025'-ஐ அமல்படுத்தியுள்ளது. இதன் கீழ், அமெரிக்கன் பிட்புல், ராட்வீலர், புல் டெரியர், டோகோ அர்ஜென்டினோ, கேன் கோர்ஸோ, அமெரிக்கன் புல்டாக் உள்ளிட்ட ஆறு அபாயகரமான நாய் இனங்கள் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்துள்ள உரிமையாளர்கள் தங்கள் நாய்களை வெளியில் அழைத்து செல்லும்போது முகமூடி அணிவிப்பதும், பலமான கயிற்றால் கட்டுப்படுத்துவதும் அவசியம். செல்லப்பிராணிகளின் எண்ணிக்கை வீட்டிலுள்ள பரப்பளவை பொறுத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பூங்காக்கள், ஏரிகள் உள்ளிட்ட பொது இடங்களில் நாய்களை அழைத்து செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் நாய்கள் அசுத்தம் செய்தால், உரிமையாளர் அதை அகற்ற வேண்டும். இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும்.