இந்திய பவுலிங் அபாரம்.. வெற்றிக்கு தேவை 135 ரன்கள் தான்.. இன்றைய கடைசி நாள் த்ரில் தான்..!

Siva

திங்கள், 14 ஜூலை 2025 (07:32 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணி அபாரமாக விளையாடியது. இன்றைய கடைசி நாளில் வெற்றிக்கு 135 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் நேற்று ஆட்டம் முடிவடைந்துள்ளது.
 
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 387 ரன்கள் அடித்திருந்தாலும், இரண்டாவது இன்னிங்ஸில் அந்த அணியின் விக்கெட்டுகள் மளமளவென விழுந்ததால் 192 ரன்கள் மட்டுமே எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் வாஷிங்டன் சுந்தர் அபாரமாக பந்து வீசி நான்கு விக்கெட்டுகளை எடுத்தார். பும்ரா, சிராஜ் தலா இரண்டு விக்கெட்டுகளையும், நிதிஷ்குமார் ரெட்டி, ஆகாஷ் தீப் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
 
இதனை அடுத்து, இந்திய அணிக்கு 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களத்தில் இறங்கியது. நேற்றைய ஆட்ட நேர இறுதியில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் வெற்றிக்கு 135 ரன்கள் மட்டுமே தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவும் தனது இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட்டுகளை மளமளவென இழந்து வருவதால், ஆட்டம் திசை மாறவும் வாய்ப்பு உள்ளது என்றும், எனவே இந்திய பேட்ஸ்மேன்கள் கவனமாக விளையாட வேண்டும் என்றும் வர்ணனையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்