நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க அனுமதிக்க முடியாது. ஆர்.எஸ். பாரதி மனுவை தள்ளுபடி செய்வேன்: நீதிபதி அதிரடி..!

Siva

வெள்ளி, 31 அக்டோபர் 2025 (09:17 IST)
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
 
இந்த புதிய சட்டங்களை ரத்து செய்யக் கோரி தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தன.
 
சட்டங்கள் நிறைவேற்றும்போது 'முறையான கலந்தாலோசனை இல்லை', 'போதிய உறுப்பினர்கள் இல்லை' போன்ற காரணங்களை கூறி, சட்டம் இயற்றும் தகுதியை எதிர்க்க முடியாது என்று தலைமை நீதிபதி தெரிவித்தார். இதுதொடர்பான தீர்ப்புகள் இல்லையெனில் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் எச்சரித்தார்.
 
மேலும், சட்டங்களுக்கு ஆதரவாக இடையீட்டு மனு தாக்கல் செய்ய வழக்கறிஞர் முயன்றபோது, நீதிபதிகள் அதனை ஏற்க மறுத்து, "இந்த நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க அனுமதிக்க முடியாது" என்று திட்டவட்டமாக கூறினர்.
 
இறுதியாக, வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் மூன்றாவது வாரத்திற்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்