தனியார்மயமாகும் பொதுத்துறை வங்கிகள்? – வங்கி ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு!

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (09:08 IST)
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க மத்திய அரசு முயல்வதாக வங்கி ஊழியர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர்.

சமீபமாக மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள சில பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கி வருகிறது. இந்நிலையில் தற்போது நடந்து வரும் குளிர்கால கூட்டத்தொடரில் பொதுத்துறை வங்கிகள் இரண்டை தனியார்மயமாக்குவது தொடர்பான வங்கிகள் சட்ட திருத்த மசோதா 2021 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மேலும் சில கோரிக்கைகளை வலியுறுத்தியும் டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் பொது சங்கம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்