தாஜ்மஹாலில் தொழுகையை நிறுத்த வேண்டும்: ABISY அமைப்பின் சர்ச்சை கோரிக்கை

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2017 (15:54 IST)
கடந்த சில வாரங்களாகவே உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் அரசியல்வாதிகளின் கைகளில் அகப்பட்டு பாடாய் பட்டு வருகிறது. தாஜ்மஹாலை சுற்றுலா பட்டியலில் இருந்து முதலில் உபி அரசு நீக்கியது. அதன் பின்னர் தாஜ்மஹால் முன்னொரு காலத்தில் சிவன் கோவிலாக இருந்தது என்றும் பாஜகவினர்களால் கூறப்பட்டது.



 
 
இந்த நிலையில்  ABISY (Akhil Bharatiya Itihas Sankalan Yojna ) என்ற அமைப்பு ஒரு சர்ச்சையான கோரிக்கைய வைத்துள்ளது. தாஜ்மஹால் என்பது ஒரு மதத்துக்கு மட்டும் உரிமையானதல்ல,. இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவானது. அதில் முஸ்லீம்களுக்கு மட்டும் தொழுகை நடத்த அனுமதிப்பது சரியல்ல
 
தாஜ்மஹாலில் தொழுகை நடத்துவதை நிறுத்த வேண்டும், அல்லது அங்கு சிவன் பஜனை பாடல்கள் பாட அனுமதிக்க வேண்டும் என்று இந்த அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்