பிறந்த 6 நிமிடங்களில் ஆதார் அட்டை பெற்ற குழந்தை

Webdunia
ஞாயிறு, 24 செப்டம்பர் 2017 (20:49 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று பிறந்த பெண் குழந்தைக்கு ஆறு நிமிடங்களில் ஆதார் அட்டை வழங்கிய சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மகாராஷ்டிரா மாநிலம் ஒஸ்மானாபாத் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் இன்று ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு பாவனா சந்தோஷ் ஜாதவ் என பெற்றோர் பெயரிட்டனர். மேலும், குழந்தையின் தந்தை பிறப்புச் சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டைக்காக ஆன்லைன் மூலம் விண்னப்பித்துள்ளார்.
 
சரியாக விண்ணப்பித்த ஆறாவது நிமிடத்தில் பாவனா சந்தோஷ் ஜாதவ் என்ற பெயரில் ஆதார் அட்டையும், பிறப்புச் சான்றிதழும் ஆன்லைன் மூலமாக கைக்கு வந்துள்ளது.
 
இதை அம்மாவட்ட கலெக்டர் ராதாகுருஷ்ணா காமே மாவட்டத்துக்கு கிடைத்த பெருமை என குறிப்பிட்டுள்ளார். மேலும் கடந்த ஓராண்டு காலமாக மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த சுமார் 1300 குழந்தைகளுக்கு உடனடியாக ஆதார் அட்டை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்