ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் இணைப்பு; மத்திய அரசின் அடுத்த அதிரடி

வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (16:47 IST)
ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.


 

 
மத்திய, மாநில அரசின் நல திட்டங்களை பெற ஆதார் எண் முதலில் கட்டாயமாக்கப்பட்டது. பின் அதை கட்டாய அடையாள அட்டை பிரிவில் சேர்ந்துவிட்டனர். செல்போன் எண், பான் எண், வங்கி எண் உள்ளிட்ட அனைத்துடனும் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.
 
அந்த வரிசையில் தற்போது ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண் இணைப்பு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரசாத் தெரிவித்துள்ளார். இதை அவர் ஹரியானாவில் நடைபெற்ற டிஜிட்டல் மாநாட்டில் பங்கேற்றபோது தெரிவித்தார். மேலும் இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியுடன் பேசியுள்ளதாகவும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்