சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்காக அய்யன் செயலி: கேரள அரசின் சூப்பர் வசதி..!

வெள்ளி, 17 நவம்பர் 2023 (08:29 IST)
சபரிமலைக்கு வரும் ஐயப்பன் பக்தர்கள் முழு விவரங்களை தெரிந்து கொள்வதற்கு அய்யன் செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலை கோவிலுக்கு தரிசனம் செய்ய வருகின்றனர். இந்த நிலையில் கார்த்திகை மாதம் பிறந்து விட்டதை அடுத்து ஐயப்ப பக்தர்கள் மாலை போட தொடங்கியுள்ளனர். 
 
இந்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெற உள்ளதை அடுத்து பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்  ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக அய்யன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த செயலி மூலம் வனவிலங்குகளிடம் இருந்து பக்தர்களை பாதுகாக்கவும் வனவிலங்கு நடமாட்டத்தையும் அறிந்து கொள்ள முடியும். அது மட்டும் இன்றி தங்குமிடம், கழிவறை வசதி, குடிநீர் வசதி  உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஐயப்ப பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 எனவே ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்களுக்கு இந்த செயலி மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்