பொதுவாக ஐயப்ப சுவாமிக்கு மாலை போட்டு விரதம் இருப்பவர்கள் ஒரு மண்டலம், அதாவது 41 நாட்கள் விரதம் இருப்பது வழக்கம். ஆனால் மண்டல பூஜை தரிசனத்தை திட்டமிட்டு செல்பவர்கள் சக நாட்களிலும், மகர விளக்கு தரிசனத்தை திட்டமிட்டு செல்பவர்கள் 60 நாட்களும் விரதம் இருந்து இருமுடி கட்டி யாத்திரை செல்வது வழக்கம்.
கார்த்திகை முதல் நாளில் சபரிமலை நடை திறக்கும்போதே விரதம் மேற்கொள்வது சிறப்பு வாய்ந்தது. சுவாமி ஐயப்பனுக்கு விரதத்தை பலரும் அருகில் உள்ள ஸ்தலங்களில் இருந்து தொடங்குவர். ஐயப்ப விரதத்தை மேற்கொள்ள கன்னியாக்குமரியில் உள்ள பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில், பூதபாண்டி பூதலிங்கசுவாமி திருக்கோவில், பார்வதிபுரம் சுவாமி ஐயப்பன் திருக்கோவில், குமாரகோவில் வேளிம்லை சுப்ரமணியஸ்வாமி திருக்கோவில், நாகர்கோவில் நாகராஜ சுவாமி திருக்கோவில் ஆகியவை பிரசித்தி பெற்ற ஸ்தலங்கள் ஆகும்.