விவசாயிகள் போராட்டம்: பத்திரிக்கையாளரை தாக்கிய போலீஸார்!

Sinoj
புதன், 14 பிப்ரவரி 2024 (13:18 IST)
டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் பற்றிய செய்திகளைச் சேகரிக்கச் சென்ற பஞ்சாப் மூத்த பத்திரிக்கையாளர் நீல் பிலிந்தர் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகிறது.

வேளாண் பொருட்களுக்கு  குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும்‘ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி   டெல்லியில் நேற்று முதல் போராட்டம் நடத்த உள்ளதாக பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் அறிவித்திருந்தனர்.

கடந்த 12 ஆம் தேதி 2 மத்திய அமைச்சர்கள் தலைமையில் விவசாயிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

எனவே, உ.பி., ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்த டெல்லியை நோக்கி விவசாயிகள் முன்னேறி வருகின்றனர்.

இவர்கள்  நுழைவதை தடுக்க அரசு எல்லைகளில் போலீஸாரை குவித்து, தடுப்புகளை வைத்து வருகின்றனர்.

நேற்று டெல்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகள் மீது கண்ணீர்புகை குண்டுகள் வீசியும், தடியடியும் நடத்தப்பட்டது, இதில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலர் கைது செய்யப்பட்டனர்.

இன்று 2 வது   நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றும் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு டெல்லியின் எல்லைப் பகுதியில் போடப்பட்டுள்ளது.

இந்த  நிலையில், டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் பற்றிய செய்திகளைச் சேகரிக்கச் சென்ற பஞ்சாப் மூத்த பத்திரிக்கையாளர் நீல் பிலிந்தர், ஷம்பு எல்லைப் பகுதியில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீஸாரால் கடுமையான தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகிறது.

அங்கிருந்தவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தததாக கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்