இந்த நிலையில் ஒரு ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தால் முடியும், ஆனால் ஒரு ஆளுநரை பதவி நீக்கம் செய்ய மாநில சட்டசபையால் முடியாது என்பதுதான் உண்மை. ஒரு ஆளுனரை நியமிப்பது குடியரசு தலைவர் மட்டுமே. அதேபோல் ஆளுநரை திரும்ப பெற்றுக் கொள்வது அல்லது நீக்குவது என்பது குடியரசு தலைவருக்கு மட்டுமே உள்ள அதிகாரம் என்பதால் மாநில சட்டசபையால் அது முடியாது என்பதுதான் சட்டத்தின் படி இருக்கிற உண்மை.