விமான தாக்குதலால் பாஜகவுக்கு தேர்தல் லாபமா?

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2019 (07:15 IST)
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இரண்டு மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் புல்வாமா தாக்குதலும் அதனையடுத்து அதிரடி பதில் தாக்குதல் நிகழ்வுகளும் நடந்துள்ளது குறித்து ஏற்கனவே எதிர்க்கட்சிகள் சந்தேகம் தெரிவித்துள்ள நிலையில் இந்தியாவின் பதிலடி விமான தாக்குதலுக்கு பின் பிரதமர் மோடியின் இமேஜ் அதிகரித்திருப்பதாகவும், பாஜகவுக்கு செல்வாக்கு கூடியிருப்பதாகவும் ஒரு கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது
 
பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பகுதியில் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் நடத்திய அதிரடி தாக்குதல், மக்களவை தேர்தலில், மோடியின் வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கி உள்ளதாகவும், இந்த தாக்குதலுக்கு பின் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்று, பிரதமர் ஆகும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் தேர்தல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
 
ஆனால் இந்த தாக்குதல் மோடியின் தாக்குதல் இல்லை என்றும் பாஜகவின் தாக்குதல் இல்லை என்றும், இது இந்தியாவின் தாக்குதல் என்றும், இந்த தாக்குதலை மனதில் வைத்து மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருவது இயலாத விஷயம் என்றும் சமூக வலைத்தள பயனாளிகள் கூறி வருகின்றனர்.
 
எது எப்படியாக இருப்பினும் இந்த தாக்குதலை பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவார்கள் என்பதால் தேர்தல் முடிவு அக்கட்சிக்கு சாதகமாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவே கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்