பிச்சையா? லஞ்சமா? மோடியை சாடும் ப.சிதம்பரம்

ஞாயிறு, 24 பிப்ரவரி 2019 (11:37 IST)
கடந்த 1 ஆம் தேதி 2019 - 2020 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை பியூஷ் கோயல் தாக்கல் செய்த போது, விவசாயிகளுக்காக பிரதம மந்திரி விவசாய நலநிதி என்ற புதிய திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டது.
 
இந்த திட்டத்தில் குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படும். இந்த திட்டத்தை மோடி உத்தரபிரதேசத்தில் தொடங்கி வைத்தார். இதன்படி, சுமார் 2 கோடி விவசாயிகளுக்கு முதல் தவணையாக ரூ.2,000 வழங்கப்படுகிறது.
 
இந்நிலையில் இத்திட்டத்தை விமர்சித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பின்வருமாறு விமர்சித்துள்ளார், இன்று வாக்குக்கு பணம் கொடுக்கும் நாள். ஆம், விவசாயிகளின் குடும்பத்தினரின் வாக்குகளை பெறுவதற்காக அதிகாரப்பூர்வமாகவே பாஜக அரசு ரூ.2,000 லஞ்சமாக வழங்குகிறது. 
 
விவசாய குடும்பத்துக்கு ரூ.2,000 தரப்போகிறார்கள். இது ஓட்டுக்கு லஞ்சம் என்பதைத் தவிர வேறு என்ன? 5 பேர் கொண்ட விவசாயக் குடும்பத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ.17. இது உதவித்தொகையா, பிச்சையா, லஞ்சமா? இதைவிட பெரிய வெட்க கேடு ஏதுமில்லை என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்