மகளுடன் உடலுறவு கொண்டாரா ராம் ரஹிம் சிங் சாமியார்?

Webdunia
திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (23:00 IST)
பிரபல ஆன்மீக சாமியார் ராம் ரஹிம் சிங் கடந்த 15 ஆண்டுகளுக்கு முந்தைய பாலியல் வழக்கு ஒன்றில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



 
 
இந்த நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவருடைய மருமகன் விஸ்வாஸ் என்பவர், ராம் ரஹிம் சிங் தனது மகளுடன் அதாவது தனது மனைவியுடன் உடலுறவு கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
 
கடந்த 2009ஆம் ஆண்டு பிரியங்கா என்பவரை திருமணம் செய்து கொண்டார் விஸ்வாஸ். இந்த நிலையில் தன்னுடைய குடும்பத்தினர் பிரியங்காவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். அந்த சமயத்தில்தான் பிரியங்காவை தனது மகளாக தத்து எடுத்து கொண்ட சாமியார், பின்னர் மருமகன் விஸ்வாஸின் பிசினஸிற்கும் உதவியுள்ளார். ஆனால் இரண்டு வருடம் கழித்துதான் சாமியார் தன்னுடைய மனைவியை மயக்கி அவருடன் உடலுறவும் கொண்டுள்ளார் என்பது விஸ்வாஸுக்கு தெரியவந்ததாம். இதுகுறித்து அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். ஆனால் விஸ்வாஸ் குற்றச்சாட்டில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பது விசாரணையின் முடிவில்தான் தெரியவரும். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்